Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

துருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்!

03:11 PM Mar 12, 2024 IST | Web Editor
Advertisement

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Advertisement

பரியேறும் பெருமாள், கர்ணன்,  மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ்,  துருவ் விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளார்.  இத்திரைப்படம் முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேசனின் பயோ-பிக்காக உருவாகவுள்ளது.  இத்திரைப்படத்திற்காக துருவ் விக்ரம் கபடி பயிற்சியில் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவுள்ளார்.  அதே போல் இந்தப் படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டியோஸ்,  அப்ளாஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பதும் உறுதியாகியுள்ளது.    மாரி செல்வராஜ்ஜின் முதல் படமான பரியேறும் பெருமாள்  பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வெளியானது.  இக்கூட்டணியை உறுதி செய்யும் விதமாக புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் துருவ் விக்ரம்,  மாரி செல்வராஜ்,  அனுபமா பரமேஸ்வரன்,  பா ரஞ்சித்,  அப்ளாஸ் தயாரிப்பு நிறுவனத்தின் குழுவினர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 15 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Anupama ParameswaranDhruv Vikrammari selvarajPa. Ranjith
Advertisement
Next Article