Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Armstrong கொலை வழக்கு | அரசுத் தரப்பில் வாதாட மூத்த வழக்கறிஞர்கள் நியமனம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசுத் தரப்பில் வாதாட 2 மூத்த குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
06:20 PM Jan 24, 2025 IST | Web Editor
Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி சிலர் சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக காவல்நிலையத்தில் 8 பேர் சரண் அடைந்தனர். அவரிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில் முன்விரோதம் மற்றும் பகை காரணமாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது.

Advertisement

தொடர்ந்து, இந்த கொலைவழக்கில் 27 நபர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டது.

கொலைவழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட 30 பேர்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிக்கையில் A1 குற்றவாளியாக பிரபல ரவுடி நாகேந்திரன் மற்றும் A2 குற்றவாளியாக தலைமறைவாக இருக்கும் ரவுடி சம்போ செந்தில் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நாகேந்திரன், அவரின் மகன் அஸ்வத்தாமன் ஆகியோர் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தனர். 8 பேர் நேரில் ஆஜராகினர்.

அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை தரப்பில் வாதாட மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.ஸ்ரீனிவாஸ் மற்றும் சிஎஸ்எஸ் பிள்ளை ஆகியோர் சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நாகேந்திரன் தரப்பில் வழக்கறிஞர் பாலாஜி ஆஜராகி, கொலை வழக்கு தொடர்பான காவல் துறை அளித்த வழக்கு ஆவணங்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் பக்கங்கள் இருப்பதாகவும், அதை முறைப்படுத்தாமல் வழங்கி இருப்பதாகவும், மேலும் இது தொடர்பாக காவல்துறை அளித்த பென் டிரைவ்-ல் சில பக்கங்களை காணவில்லை எனவும் தெரிவித்தார்.

ஜாமின் பெறுவதை இழுதடிப்பதற்காக வழக்கு ஆவணங்களை முறைப்படுத்தாமல் வழங்கியும், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை அருகில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக கொண்டு செல்லப்பட்ட வெடிகுண்டு கைமாறியதாகவும் காவல்துறை கூறி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

இதன்பின் அனைத்து ஆவணங்களையும் முறைப்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை விரைந்து விசாரிக்க பிப்ரவரி 7 ம் தேதிக்குள் அனைவரும் வழக்கறிஞர் வைத்து கொள்ள அறிவுறுத்தினார்.

இல்லாவிட்டால் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் வழக்கறிஞரை நீதிமன்றம் நியமிக்கும் அதை ஏற்காவிட்டால் வழக்கறிஞர்கள் வைக்காதவர்களை தவிர்த்து விட்டு, வழக்கின் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்து, வழக்கில் கைது செய்யப்பட்ட 27 பேரின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 7 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

Advertisement
Next Article