Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துப்பணிக்கான மற்றுறொரு ஊக்கம்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு!

பாரதிய பாஷா விருதுக்கு தேர்வான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டி உள்ளார்
09:02 PM Apr 10, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகளில் ஒன்றான  ‘சஞ்சாரம்’ நாவலுக்கு 2018ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது எஸ்.ராமகிருஷ்ணன்  வென்றார். மேலும் இவர்  ஞானவாணி விருது, தாகூர் இலக்கிய விருது, இயல் விருது, மாக்சிம் கார்க்கி விருது, இலக்கியச் சிந்தனை விருது, கலைஞர் பொற்கிழி விருது, கொடீசியா வாழ்நாள் சாதனையாளர் விருது, இலக்கிய வேள் விருது, தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

Advertisement

அதன் தொடர்ச்சியாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இன்று(ஏப்ரல்.10) இந்தியாவில் பெருமைக்குரிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருதையும் அத்துடன் சேர்த்து  ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும்  அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற மே 1 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில், இந்த விருது அவருக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த நிலையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய அளவில் புகழ்மிக்க பாரதிய பாஷா பரிஷித் அமைப்பின் விருது பெறவுள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு என் பாராட்டுகள்! சமகாலத் தமிழிலக்கியத்தின் நன்கு அறியப்பட்ட முகமாக விளங்கி, குறிப்பிடத்தக்க பல படைப்புகளை அளித்து, சாகித்திய அகாதமி விருது, இயல் விருது. கலைஞர் பொற்கிழி விருது உள்ளிட்ட பல உயரிய அங்கீகாரங்களைப் பெற்றுள்ள அவரது எழுத்துப்பணிக்கான மற்றுமொரு ஊக்கமாக இவ்விருது அமையும் என நம்புகிறேன். தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சிக்கும். மானுடத்தின் மேன்மைக்கும் உரமாகும் மேலும் பல படைப்புகளை அவரிடம் எதிர்நோக்குகிறேன்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
Bharatiya BhashaMKStalinS RamakrishnanWriter
Advertisement
Next Article