Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குவைத்தில் மற்றொரு தொழிலாளர் குடியிருப்பில் தீ விபத்து: 2 இந்தியர்கள் காயம்!

01:06 PM Jun 15, 2024 IST | Web Editor
Advertisement

குவைத் நாட்டில் உள்ள மற்றொரு தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில்,  அதில் சிக்கி 2 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர்.

Advertisement

குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வந்தனர்.  இந்நிலையில்  13ம் தேதி அதிகாலை 4 மணியளவில் அக்கட்டடத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.  இந்த தீ மளமளவென பரவி கட்டடம் முழுவதும் பரவியது.  இந்த  தீவிபத்தில்  7 தமிழர்கள் உள்பட 50 பேர் பலியாகினர்.  தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 31 பேரின் உடல்கள் இந்திய விமான கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில், குவைத் நாட்டில் உள்ள மற்றொரு தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதில்,  அதில் சிக்கி 2 இந்தியர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  குவைத் மஹ்பூலா பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.  தொழிலாளர் குடியிருப்பின் தரைத்தளத்திலிருந்து பரவிய தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்தைத் தொடர்ந்து அச்சமடைந்த 2 இந்திய தொழிலாளர்கள் மாடியில் இருந்து குதித்ததில் காயமடைந்தனர்.  காயமடைந்த 2 இந்திய தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :
KuwaitKuwait Fire Accident
Advertisement
Next Article