Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாக். முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி மீது மேலும் ஒரு வழக்கு!

10:22 AM Dec 02, 2023 IST | Web Editor
Advertisement

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி மீது மேலும் ஒரு ஊழல் வழக்கை அந்த நாட்டின் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு (என்ஏபி) பதிவு செய்துள்ளது.

Advertisement

பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து இம்ரானை நாடாளுமன்றம் கடந்த ஆண்டு நீக்கியது. அதன் பிறகு அவருக்கு எதிராக தேசத் துரோகம், பயங்கரவாதம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேறொரு வழக்கொன்றில் அவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி மீது மேலும் ஒரு வழக்கை அந்நாட்டு தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து என்ஏபி உயரதிகாரி முஸாஃபர் அப்பாஸி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

19 கோடி பவுண்டை (சுமாா் ரூ.2,000 கோடி) சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி உள்ளிட்டோர் மீது என்ஏபி விசாரணை அதிகாரி உமர் நதீம் வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.” என அவர் கூறினார். 

Tags :
Former Prime MinisterImranKhanNews7Tamilnews7TamilUpdatespakistan
Advertisement
Next Article