Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பீகாரில் இடிந்து விழுந்த மற்றொரு பாலம்! ஒரே வாரத்தில் 2 பாலங்கள் இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

07:50 PM Jun 22, 2024 IST | Web Editor
Advertisement

பிகாரில் ஒரே வாரத்தில் 2 பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பிகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் கடந்த ஜூன் 18ஆம் தேதி  பாலம் ஒன்று இடிந்து விழுந்த நிலையில் அடுத்த சில நாட்களில் மாநிலத்தில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்திருக்கிறது. தற்போது, பிகார் மாநிலம், சிவான் மாவட்டத்தில் கண்டக் கால்வாய் மீது கட்டப்படிருந்த சிறிய பாலம் இன்று இடிந்து விழுந்தது.

அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. படேடா மற்றும் கனௌலி ஆகிய இரு கிராமங்களை இணைக்கும் வகையில் 45 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலம் கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பாலம் இடிந்து விழுந்ததற்கு மண் அரிப்பு தான் காரணம் என கூறப்படுகிறது. பாலம் இடிந்து விழும் சத்தம் வெகு தொலைவில் கேட்டதால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், சிவான் பகுதியில் கட்டப்படிருந்த சிறிய பாலம் திடீரென விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : சின்ன சின்ன கண்கள்…. விஜய் – பவதாரிணி குரலில் வெளியான GOAT திரைப்படத்தின் 2-ஆவது சிங்கிள்!

இதுகுறித்து கிராமவாசி முகமது நயிம் கூறுகையில் :

"பொதுமக்கள் பங்களிப்பு மூலம் கட்டப்பட்ட பாலம், மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் இடிந்து விழுந்தது. பாதிக்கப்பட்ட கிராமங்களை இணைக்க மாநில அரசு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இதனால் சுமார் 20,000 பேர் பாதிக்கப்படுவார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பில் யாரும் பாலத்தை ஆய்வு செய்ய வராதது அதிர்ச்சியளிக்கிறது"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
arariaBiharBridgeCanaldaraundamaharajganjsiwan district
Advertisement
Next Article