பாகிஸ்தானில் ’ஜாஃபர் எக்ஸ்பிரஸ்’ மீது மீண்டும் தாக்குதல்..!
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் அரசுக்கும் பலூசிஸ்தான் இயக்கத்திற்கும் இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. அவ்வப்போது பலூசிஸ்தான் இயக்கம் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இன்று குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிந்து மாகாணத்தின் ஷிர்காப்பூர் மாவட்டத்தின் சுல்தான் கோட் ரயில் நிலையம் அருகில், ரயில் வந்தபோது அதன் தண்டவாளத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர்.
இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில், பலூசிஸ்தான் விடுதலைப் படை (BLA) இதே ரயிலைக் கடத்தி 400 பயணிகளை பிணைக்கைதிகளாக பிடித்தனர். பின்னர் பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து பயணிகளை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.