Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

07:40 PM Jun 27, 2024 IST | Web Editor
Advertisement

'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டிரைலர் வரும் 29ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கியவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து நடிகர்,  தயாரிப்பாளர்,  பாடகர்,  இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார்.  சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ரோமியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.  இந்த படத்தின் வசூல் சிறப்பாகவே அமைந்தது.

இதனையடுத்து,  விஜய் ஆண்டனி நடித்துள்ள  புதிய படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் அறிவிப்பு வெளியானது.  விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சத்யராஜ்,  டாலி தனஞ்சயா,  முரளி ஷர்மா,  மேகா ஆகாஷ்,  தலைவாசல் விஜய்,  சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிருத்வி அம்பெர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  விஜய் ஆண்டனி பாடல்களுக்கு மட்டும் இசை அமைக்க,  அச்சு ராஜாமணி பின்னணி இசையை அமைத்துள்ளார்.

இப்படத்தை கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ளனர்.  இத்திரைப்படத்தின் முதல் பாடலான `தீரா மழை’ பாடலும்,  2வது பாடலான “தேடியே போறேன்” பாடலும் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.  சில நாட்களுக்கு முன் படத்தின் சென்சார்ஷிப் போர்ட் U/A சான்றிதழை வழங்கியது.  இந்த நிலையில்,  'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டிரைலர் வரும் 29ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Mazhai Pidikatha Manithansarath kumarTrailerTrailer Release Datevijay AntonyVijay Milton
Advertisement
Next Article