Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

செப். 21-ம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

10:11 AM Jul 26, 2024 IST | Web Editor
Advertisement

இலங்கையில் வரும் செப்டம்பர் 21ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, கோத்தபய ராஜபக்ச அதிபராக பொறுப்பேற்றார். ஆனால், அதைதொடர்ந்து தீவு நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் வெடித்தன. நாடு முழுவதும் பதற்றம் நிலவியது.

இதனால், கடந்த 2022ம் ஆண்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே, நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்கே அதிபராகவும், பிரதமராக குணவர்த்தனவும் பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கை, இந்தியா உள்ளிட்ட உலகநாடுகளின் ஆதரவால் தற்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : தூய்மை பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய உயர்வை அமல்படுத்தாவிட்டால் வாரண்ட் – அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

இந்நிலையில், இலங்கையில் தற்போது உள்ள அதிபர் பதவிக்காலம் அக்டோபர் மாதத்துடன் நிறைவடையுள்ள நிலையில் தேர்தல் நடைபெற உள்ளது. இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
announcedPresidential ElectionSeptemberSri Lanka
Advertisement
Next Article