Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விஜய் நடிக்கும் ‘தி கோட்’ – 3-ஆவது சிங்கிள் ரிலீஸ் குறித்த அப்டேட் கொடுத்த படக்குழு!

05:07 PM Aug 01, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் விஜய் நடித்துள்ள GOAT திரைப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’.விஜய்யின் 68வது திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

‘கோட்’ திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தி முடிந்தது. இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்கிடையே, அண்மையில், ‘கோட்’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றன.

இதையும் படியுங்கள் : “ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான வரியை நீக்க வேண்டும்!” – மத்திய நிதியமைச்சருக்கு நிதின் கட்காரி கடிதம்!

இந்த திரைப்படத்தின் 3வது பாடலில் நடிகர் விஜய்யுடன் நடிகை த்ரிஷா இணைந்து நடனம் ஆடியுள்ளதாக படக்குழு அறிவித்தது. மேலும், இந்த பாடலின் லிரிக் வீடியோவாக வெளியாக உள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீடும் ஆகஸ்ட் மாதம் 3-ஆவது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்நிலையில்,‘கோட்’ திரைப்படத்தின் 3வது பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
3singlegoatGreatestOfAllTimeThalapathy68VenkatPrabhu
Advertisement
Next Article