Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டி - திமுக அறிவிப்பு!

01:42 PM Jun 11, 2024 IST | Web Editor
Advertisement

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.  இந்த தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 14ஆம் தேதி தொடங்கவுள்ளது.

வேட்புமனுதாக்கலுக்கான கடைசி தேதி ஜூன் 21 ஆகும்.  மிக குறைந்த காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் உள்ளன.  அந்த வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

இதையும் படியுங்கள் : பரமத்தி வேலூர் அருகே கோர விபத்து – கார் ஓட்டிய 2 சிறுவர்களும் உயிரிழப்பு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக அறிவிப்பது, யாரை பொறுப்பாளராக நிறுத்துவது போன்ற விவகாரங்களை கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  இந்த கூட்டத்தில் துரைமுருகன்,  எ.வ.வேலு,  பொன்முடி, கனிமொழி,  கே.என். நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் விருப்பமனு வழங்கப்படுவதில்லை எனவும் நேரடியாக திமுக வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்த நிலையில்,  விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Tags :
arrivalayamCMOTamilNaduMKStalinTamilNaduvikravandi
Advertisement
Next Article