Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#AnnaUniversity தேர்வுக் கட்டணம் உயர்கிறதா? அமைச்சர் பொன்முடி விளக்கம்!

06:12 PM Aug 25, 2024 IST | Web Editor
Advertisement

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Advertisement

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வுக் கட்டணம், பட்டச் சான்றிதழ் கட்டணம், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் கட்டணம், ஆய்வறிக்கைக் கட்டணம் ஆகியவை 50% உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இந்தக் கட்டண உயர்வுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "அடுத்த சிண்டிகேட்டில் தீர்மானம் நிறைவேற்றும் வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணம் நிறுத்திவைக்கப்படுகிறது. தேர்வு கட்டணத்தை உயர்த்துவது மாணவர்களை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தற்போதுள்ள நடைமுறையே தொடரும்." இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Tags :
Anna universityChennaiExam FeesMinister ponmudiSemester Feesstudents
Advertisement
Next Article