பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலையின் சாதனைகள் பாராட்டத்தக்கது - மத்திய அமைச்சர் அமித்ஷா
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த நிலையில் புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி துவங்கியது. இதில் தற்போதைய பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை விருப்ப மனு தெரிவிக்காத நிலையில் கட்சியின் பல மூத்த தலைவர்கள் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தமிழக பாஜகவின் சட்டமன்றத் தலைவரான நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பலர் வேட்புமனுவை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யாததால் நயினார் நாகேந்திரன் ஒருமனதாக பாஜக மாநிலத் தலைவராகிறார். இதன் மூலம் தமிழக பாஜகவின் 9வது தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது..
“ தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடமிருந்து மட்டுமே வேட்புமனுவைப் பெற்றுள்ளோம். தமிழ்நாடு பாஜக தலைவராக,