12 பொறியியல் கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு!
மாணவர் சேர்க்கை 5% சதவீதத்திற்கும் குறைவாக உள்ள 12 பொறியியல் கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் 500க்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகளை கொண்டுள்ளது. இந்த கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது இணைப்பை புதுப்பித்து கொள்ள வேண்டும். புதுப்பிக்காத கல்லூரிகளின் சேவை நிறுத்தப்படும். சமீப காலமாகவே பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட 5 சதவீத இடங்களை கூட பல மாவட்டங்களில் உள்ள 12 கல்லூரிகள் நிரப்பவில்லை. இந்த கல்லூரி மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்படுவார்கள் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளதாவது;
மேலும் 2024-25 ஆம் கல்வியாண்டில் மாணவர்களை சேர்க்க பல்கலைக்கழகம் இந்த கல்லூரிகளை அனுமதிக்காது. சமீபத்தில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், 25 கல்லுாரிகளை ஒரே நேரத்தில் மூடினால், பல்கலையின் வருவாய் பாதிக்கும் என்பதால், 5 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள கல்லூரிகளுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.