Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அண்ணா நினைவு தினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி !

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
09:17 AM Feb 03, 2025 IST | Web Editor
Advertisement

மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலையிலிருந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் வரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

Advertisement

இந்த பேரணியில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட திமுகவினர், கூட்டணி கட்சியினர் பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்த அமைதி பேரணிக்காக 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags :
AnnabeachChennaiCHIEF MINISTERDMKduputycmMarinaMayorMemorial DayMinistersMKStalin
Advertisement
Next Article