அனிருத் பிறந்தநாள் : சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய “எல்.ஐ.கே” படக்குழு..!
தமிழ் சினிமாவின் முண்ணனி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிரூத் ரவிசந்திரன். தனுஷின் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் முதல் படத்திலேயே தனது பாடல்கள் மற்றும் பிண்ணனி இசையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதிலும் ’ஒய் திஸ் கொல வெறி’ பாடல் உலகம் முழுவதிலும் சென்சேஷனல் ஹிட்டடித்தது.
இதனை தொடர்ந்து ரஜினி,கமல், அஜித், விஜய் முண்ணனி நடிகர்களுக்கு இசையமைத்து நட்சத்திர அந்தஸ்த்து பெற்றுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களுக்கும் பணியாற்றி இந்திய அளவில் இசையமைப்பளராக தன்னை தகவமைத்து வருகிறார் அனிரூத்.
இந்த நிலையில் அனிருத் இன்று தனது 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிரூத் இசையமைத்து வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படமான எல்.ஐ.கே படக்குழு அனிரூத்தின் பிறந்தநாளையொட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.