Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கான்பூரிலிருந்து வந்த அரிய விலங்குகள் என்னென்ன தெரியுமா?

09:26 PM Jan 29, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை புறநகர் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் உயிரியல் பூங்கா மத்திய உயிரியல் பூங்கா இடையே ஆணையத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு,  விலங்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு,  கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்,  சென்னை புறநகர் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கும், உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் உயிரியல் பூங்காவிற்கும் இடையே விலங்குகளை பரிமாறிக்கொள்ள முன்மொழியப்பட்டது.

இதையும் படியுங்கள்: வேங்கைவயல் விவகாரம்: உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

இதன்படி,  10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள்,  ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிஃபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் என மொத்தம் 4 இனங்கள் கான்பூர் விலங்கியல் பூங்காவில் இருந்து சென்னைக்கு நேற்று (ஜன.28) கொண்டு வரப்பட்டன.  இந்த விலங்குகள் பரிமாற்றத்தில் கான்பூர் உயிரியல் பூங்கா பணியாளர்கள், வனச்சரக அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர் மற்றும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால்நடை உதவி மருத்துவர் ஆகியோர் உடனிருந்தனர்.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து கான்பூர் உயிரியல் பூங்காவிற்கு ஒரு ஜோடி கட்ட உடல் மலைப்பாம்புகள், இரண்டு ஜோடி சருகு மான்கள்,  3 நெருப்புக்கோழிகள், ஒரு ஜோடி பச்சை உடும்புகள் மற்றும் ஒரு ஆண் சாம்பல் ஓநாய் ஆகிய விலங்குகள் இன்று (ஜன.29) அனுப்பப்படுகிறது.

Tags :
Arignar Anna Zoological ParkCentral Zoo AuthorityChennaiIndiaKanpur Zoological Parkuttar pradesh
Advertisement
Next Article