Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

12:41 PM Jul 07, 2024 IST | Web Editor
Advertisement

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில், ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

Advertisement

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி
ஸ்தலமாக திகழ்கிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தட்சணாயன புண்ணிய கால பிரம்மோற்சவம் எனும் ஆனி பிரம்மோற்சவம் சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகர்வதை உணர்த்துவதாக சொல்லப்படுகிறது.

இதனை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள
தங்கக்கொடி மரத்தின் முன்பாக விநாயகர், உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதனையடுத்து ஆனி பிரம்மோற்சவமானது சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழுங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இதில் ஏராளமானோர் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  இதனைத் தொடர்ந்து தினந்தோறும் காலை, இரவு என இரு வேளையும் சாமி வீதி உலா நடைபெறும்.  பின்னர் 10வது நாள் தீர்த்த வாரியுடன் விழா நிறைவடைகிறது.

Tags :
#brahmotsavamArunachaleswarar Templedevoteesfestivaltiruvannamalai
Advertisement
Next Article