அடிப்படை வசதி இல்லாத அங்கன்வாடி - மலைவாழ் மக்கள் குற்றச்சாட்டு!
11:04 AM Nov 20, 2023 IST
|
Web Editor
இதனால் குறைந்த அளவிளான குழந்தைகள் மட்டுமே அங்கன்வாடிக்கு வருவதாக மலைவாழ் மக்கள் தெரிவித்தனர். மேலும், பாதுகாப்பு குறைந்த மலைப்பகுதியில் அங்கன்வாடி அமைந்துள்ள நிலையில், ஆசிரியர் ஒருவர் மட்டுமே பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.
Advertisement
திருப்பத்தூர் மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Advertisement
தமிழ்நாட்டில் மொத்தம் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் அமைந்துள்ள ராயனேரி எனும் சிற்றூரில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகளான சுற்றுச்சுவர் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டினர்.
எனவே, மலைவாழ் மக்கள் வசிக்கும் இப்பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை, தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்பது மலைவாழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Next Article