Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம்!

02:43 PM Aug 10, 2024 IST | Web Editor
Advertisement

ஆந்திராவில் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அந்த மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

Advertisement

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், அவர் கையெழுத்திட்ட ஐந்து கோப்புகளில் ஒன்று மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்திற்கானது. மே 7-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டு,  அடுத்த நாளான மே 8-ம் தேதியே இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது.

அன்றைய தினம் முதல் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வழங்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், பின்னர் இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிட்டியது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான மகளிர் நாள்தோறும் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இதேபோல் ஆந்திராவிலும் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி பேசியதாவது, "மிகவும் எதிர்பார்க்கப்பட்ட `பெண்களுக்கு இலவசப் பேருந்து வசதித் திட்டம்’ விரைவில் தொடங்கப்படும். மாநிலத்தை விபத்து இல்லாத மாநிலமாக மாற்றவும், எங்கள் பயணிகளுக்கு தரமான சேவைகளை வழங்கவும் நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

ஊழியர்களின் நீண்டகாலப் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள், முதலமைச்சருடன் விவாதிக்கப்பட்டு, அவற்றிற்கு விரைவில் தீர்வு காணப்படும். ஆனால், முந்தைய ஒய்.எஸ்.ஆர்.சி. ஆட்சியில், சாலைப் போக்குவரத்துத் துறையில் எந்த வளர்ச்சியும் ஏற்படுத்தப்படவில்லை’’ என்று தெரிவித்தார். ஆந்திராவில் தெலுங்கு தேசக் கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 'சூப்பர் சிக்ஸ்' என்ற பெயரில் வாக்குறுதிகளை அளித்திருந்தது. தற்போது,  அந்த வாக்குறுதிகளை  ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதாக, தெலுங்கு தேசக் கட்சி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
andra pradeshAPSRTCFree BusMandipalli Ramprasad Reddy
Advertisement
Next Article