Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Andhra கனமழை எதிரொலி - 5 தமிழக ரயில்கள் ரத்து!

07:29 AM Sep 02, 2024 IST | Web Editor
Advertisement

கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களுக்கு செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement

தென் மத்திய ரயில்வேயின் விஜயவாடா - காசிப்பேட்டை மார்க்கத்தில் ராயனபாடு ரயில்நிலையத்தில் கனமழை காரணமாக, ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்விவரம்:

சென்னை சென்ட்ரல் - ஜெய்ப்பூருக்கு நேற்று மாலை 5.40 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் (12967), தாம்பரம் - ஹைதராபாத்துக்கு நேற்று மாலை 5.30 மணிக்கு புறப்படவேண்டிய விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - புதுடெல்லிக்கு நேற்று மாலை 6.40 மணிக்கு புறப்பட வேண்டிய கிரான்ட் டிரங்க் விரைவு ரயில் (12615), சென்னை சென்ட்ரல் - புது டெல்லிக்கு நேற்று இரவு 10மணிக்கு புறப்பட வேண்டிய தமிழ்நாடு விரைவு ரயில் (12621) உட்பட 8 விரைவு ரயில்கள் ரத்துசெய்யப்பட்டன.

திருப்பிவிடப்பட்ட ரயில்கள்: 

சென்னை சென்ட்ரலில் இருந்து அகமதாபாத்துக்கு நேற்று காலை 10.10 மணிக்கு புறப்பட்ட ரயில், தெனாலி - செகந்திராபாத் - அகோலா வழியாக திருப்பிவிடப்பட்டது. தாம்பரம் - ஹைதராபாத்துக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட சார்மினார் விரைவு ரயிலும் திருப்பி விடப்பட்டது.

சென்னை சென்ட்ரல் - சாப்ராவுக்கு நேற்று மாலைபுறப்பட்ட விரைவு ரயில் மாற்றுபாதையில் இயக்கப்பட்டது. இதுதவிர, 22 ரயில்கள் மாற்றுபாதையில் திருப்பிவிடப்பட்டன.

சென்னை சென்ட்ரல் - புதுடெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு இன்று (செப்.2) காலை 6.35 மணிக்கு புறப்படும் துரந்தோ விரைவு ரயில் (12269), சென்னை சென்ட்ரல் - அகமதாபாத்துக்கு இன்று காலை 10.10 மணிக்கு புறப்படும் நவஜீவன் விரைவு ரயில் (12656), சென்னை சென்ட்ரல் - பிலாஸ்பூருக்கு இன்று பிற்பகல் 3.40 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (12652) உட்பட 4 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

Tags :
AndhraAndhra FloodAndhra RainHeavy rainfall
Advertisement
Next Article