Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் பஞ்சாயத்து ராஜ் துறையில் ஆந்திர அரசு உலக சாதனை" - ஆந்திர துணை முதலமைச்சர் #PawanKalyan பெருமிதம்!

06:07 PM Sep 16, 2024 IST | Web Editor
Advertisement

ஆந்திர பிரதேசத்தில் ஒரே நாளில் 13,000-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில், சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியும், நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜனசேனை கட்சியும் கூட்டணி அரசு அமைத்துள்ளது. இந்த நிலையில், ஆந்திரா முழுவதும் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி, 13,326 கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உலக சாதனைகளை அங்கீகரித்து கௌரவிக்கும் ‘வோர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியனின்’ மேலாளர் கிறிஸ்டோபெர் டெய்லர் க்ராஃப்ட், மேற்கண்ட சாதனைக்கான சான்றிதழையும் பதக்கத்தையும் ஹைதராபாத்தில் இன்று (செப்.16) நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, அமைச்சர் பவன் கல்யாணிடம் வழங்கியுள்ளார். இந்த தகவலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பவன் கல்யாண்.

இதுகுறித்து அந்த பதிவில், “கிராம சபைத் திட்டத்திற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 🔸 ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள், பஞ்சாயத்து ராஜ் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களால் ஆந்திர அரசு உலக சாதனை படைத்துள்ளது. 🔸 மாநிலம் முழுவதும் உள்ள 13,326 கிராம பஞ்சாயத்துகளில் ஒரே நாளில் கிராம சபைகள் நடத்தி "உலக சாதனை" படைக்கப்பட்டது.

🔸உலக ரெக்கார்ட்ஸ் யூனியன் அமைப்பு ஆந்திராவில் ஆகஸ்ட் 23 அன்று பஞ்சாயத்து ராஜ் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட கிராம சபைகளை அங்கீகரித்து, இன்று காலை ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக சாதனை சங்கத்தின் அதிகாரப்பூர்வ பதிவு மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் சாதனை ஆவணம் மற்றும் பதக்கத்தை வழங்கினார். 🔸இந்த அளவில் ஒரே நாளில் மக்கள் பங்கேற்புடன் கூட்டங்களை நடத்தும் மிகப்பெரிய கிராம நிர்வாகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை உலக சாதனைகள் சங்கத்தின் பிரதிநிதி மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறார்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

ஆந்திர பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பஞ்சாயத்து ராஜ் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவியேற்ற 100 நாள்களுக்குள் அத்துறைக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பதை அவரது ரசிகர்களும் அவரது கட்சித் தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர்.

Tags :
Andhra PradeshDeputy CMOJana SenaNews7TamilPanchayati rajpawan kalyan
Advertisement
Next Article