Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆந்திரா: செம்மரம் கடத்தியதாக 30 தமிழர்கள் கைது!

10:42 AM Nov 21, 2023 IST | Web Editor
Advertisement

ஆந்திராவில் செம்மரக் கட்டைகள் கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 30 பேர் கைது செய்யபட்டுள்ளனர். 

Advertisement

உலகிலேயே செம்மரக் கட்டைகள் ஆந்திர வனப்பகுதியில் மட்டுமே விளைகின்றன. இந்த செம்மரங்களை வெட்டி கடத்துவது சர்வதேச அளவிலான ஒரு தொழிலாக கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. செம்மர கடத்தலில் ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:பிறந்து 1மாதம் கூட ஆகாத பச்சிளம் குழந்தையை பணத்திற்காக விற்ற தாய்; 4 பேர் கைது!

இது தவிர சர்வதேச அளவிலான கடத்தல்காரர்களுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்புகள் உள்ளன. இதனை கட்டுப்படுத்தி தடுப்பதற்கு ஆந்திர மாநில அரசு கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் செம்மரக்கட்டை கடத்தல் சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார்  நடவடிக்கை எடுத்துள்ளனர் . இதில் 30 தமிழர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும்,  25 லட்ச ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார்  தெரிவித்துள்ளனர்.

Tags :
#andhra | #Tirupati | #venkateshwaratemple | #onlinebooking | Darshan | #TirupatiDevasthanam | #onlineticket | #News7Tamil | #News7TamilUpdates#Redsandalwood25 lakhs30 Tamil peoplearrestedseizedsmugglingTamilNadu
Advertisement
Next Article