"திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை பட்டியலிட்ட அன்புமணி ராமதாஸ்"!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
1.அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலில் உள்ள கல்வித் துறையை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் - 2)
2.தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில ஆட்சி மொழிகளிலும் தேசிய ஆட்சி மொழிகளாக நடைமுறைப்படுத்தும்படி மத்திய அரசை வலியுறுத்தப்படும். (வாக்குறுதி எண் - 4)
3.தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை இணை ஆட்சி மொழியாக பிரகடனம் செய்ய மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும். (வாக்குறுதி எண் - 5)
4.சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்; சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும். (வாக்குறுதி எண் - 6)
5.சென்னையில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு தன்னாட்சி அதிகாரம் பெற்று புதிய பொலிவுடன் சென்னையில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை திமுக அரசு வலியுறுத்தும்.(வாக்குறுதி எண் - 7)
6.உலகில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் தமிழ் இருக்கைகளை ஏற்படுத்த படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். (வாக்குறுதி எண் - 8)
7.தூய தமிழ் எழுத்து வரி வடிவத்தை மட்டுமே அனைவரும் பயன்படுத்துவதை கட்டாயமாக்க சட்டம் இயற்றப்படும்; அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ் அலுவல் மொழிப் பிரிவு ஏற்படுத்தப்படும். (வாக்குறுதி எண் - 11)
8.அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ் மொழியின் பயன்பாட்டை உறுதி செய்வதற்காக தமிழ் அலுவல் மொழி வளர்ச்சிப் பிரிவு ஏற்படுத்தப்படும். (வாக்குறுதி எண் -12)
http://9.இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு ஆணையிடும்படி உலக நாடுகளுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று மத்திய அரசை, திமுக தொடர்ந்து வலியுறுத்தும். (வாக்குறுதி எண் & 13)
10.தனித் தமிழீழம் அமைப்பது குறித்து ஐ.நா. அவை மூலம் உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை திமுக தொடர்ந்து வலியுறுத்தும். (வாக்குறுதி எண் -14)
11&12.ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசை திமுக அரசு வலியுறுத்தும்; இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் தமிழர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். (வாக்குறுதி எண் - 15, 16)
13.லோக் அயுக்தா அமைப்பை முறைப்படுத்தி முழுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான குற்றங்கள் விரைந்து விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும். (வாக்குறுதி எண் -18)
14.மக்களுக்குத் தேவையான அரசின் சேவைகள் குறித்த நேரத்தில் கிடைக்க சேவை உரிமைச் சட்டம் இயற்றி செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் -19)
15.ஊழல் செய்வோர் மீது சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் - 20)
16.ஊழலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்களை விரைந்து விசாரித்துத் தீர்ப்பு வழங்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் - 21)
17.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து திமுக ஆட்சியில் முறையான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். (வாக்குறுதி எண் - 22)
18.மாவட்ட ஆட்சித் தலைவர், வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகிய அதிகாரிகள் தங்கள் வலைதளத்தில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின் மனுக்கள் மீது வைத்த கோரிக்கைகள் / கடிதங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்களைப் பதிவிட நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் - 23)
19.அரசு நிர்வாகத்தில் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அமைச்சர்கள், அதிகாரிகளின் தேவையற்ற செலவுகள், பயணங்கள் தவிர்க்கப்பட்டு, செலவு கட்டுப்படுத்தப்படும். (வாக்குறுதி எண் - 24)
20.தமிழ்நாட்டில் செயல்படும் 83 பொதுத் துறை நிறுவனங்களையும் சீரமைத்து இலாபத்தில் இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண்- 26). இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.