முகேஷ் அம்பானி மகன் திருமண கொண்டாட்டம்! 51,000 பேருக்குப் பிரம்மாண்ட விருந்து!
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்தையொட்டி 51,000 கிராமவாசிகளுக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது.
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இவர்களின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. ஜாம்நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் உலக கோடீஸ்வரர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி ஆடம்பரமான நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் : மாணவர்களிடம் அதிகரிக்கும் மனஅழுத்தம்? – உதவி எண்களுக்கு குவியும் அழைப்புகள்… அதிர்ச்சி தகவல்!
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு 3 நாட்களுக்கு வெகு விமரிசையாக திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. குஜராத்தின் ஜாம் நகரில் மார்ச் 1 முதல் மூன்று நாட்களுக்கு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களை நடத்த உள்ளனர். இதில், உலகெங்கிலும் உள்ள பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இதையடுத்து, நேற்று ' அன்ன சேவை ' என்ற பெயரில் திருமண விருந்து நடைபெற்றது. இதில் 51,000 கிராமவாசிகள் கலந்து கொண்டனர். ஒரே நேரத்தில் 2,500 உணவுகள் பரிமாறப்பட்டன. இதற்காக பிரத்யேக மெனு தயார் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அன்ன சேவையில் கலந்து கொண்டவர்களுக்கு முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, மணமகன் ஆனந்த் அம்பானி, மணமகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் உணவு பரிமாறினர்.