Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

துபாயில் சேமிப்பு திட்டத்தின் மூலம் ரூ.2.25 கோடி பரிசு வென்ற இந்தியர்!

11:08 AM Jun 26, 2024 IST | Web Editor
Advertisement

துபாயின் தேசிய பத்திரங்கள் சேமிப்புத் திட்டத்தில் ஆந்திராவைச் சேர்ந்தவருக்கு ரூ.2.25 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது. 

Advertisement

துபாயில் தேசிய பத்திரங்கள் சேமிப்பு திட்டம் உள்ளது.  இந்த சேமிப்புத் திட்டத்தில் தொடர்ந்து பணம் செலுத்தி வருபவர்களைத் தேர்வு செய்து பல்வேறு பணப் பரிசுகளை அளிக்கும் சலுகையும் உள்ளது.  இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த நாகேந்திரத்துக்கு என்பவருக்கு இந்த திட்டத்தின் பரிசுத்தொகை ரூ.2.25 கோடி கிடைத்துள்ளது.

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த நாகேந்திரம் போருகட்டா என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டுமுதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டுமுதல் இந்த திட்டத்தில் சிறிய தொகையை இவர் சேமித்து வந்துள்ளார். இதில் எலெக்ட்ரீசியன் நாகேந்திரத்துக்கு கடைசி குலுக்கலில் 1 மில்லியன் ஐக்கிய அரசு அமீரக திர்ஹாம் (சுமார் ரூ.2.25 கோடி) பரிசு கிடைத்தது.

இதுகுறித்து அவர் கூறுகையில், “குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யவே வெளிநாட்டுக்கு வந்து பணியாற்றுகிறேன்.  எனக்கு 18 வயதில் மகள், 16 வயதில் மகன் உள்ளனர்.  அவர்களுக்கு சிறப்பான கல்வியை அளிக்க இந்தப் பணம் உதவிகரமாக இருக்கும்” என தெரிவித்தார்.

Tags :
Andhra PradeshDubaiNational BondsSavings Plan
Advertisement
Next Article