Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

10:44 AM Jan 05, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளை முடித்தவர்கள்  64,13,675 பேர் வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்துள்ளனர்.

Advertisement

பள்ளி, கல்லூரிகளை முடித்தவர்கள் வேலைவாய்ப்புக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வது வழக்கம். அவர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை வேலைவாய்ப்பு அலுவலங்கள் அளித்து வருகிறது.

இந்த நிலையில், 2023 டிசம்பர் 31-ந்தேதிபடி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில், 2023 டிசம்பர் 31-ந்தேதிபடி 64,13,675 பேர் வேலை வாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்துள்ளனர். இதில் ஆண்கள் 29,73,923 பேரும், பெண்கள் 34,39, 455 பேரும், மூன்றாம் பாலினத்தார் 297 பேரும் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : மரணத்திலும் இணைபிரியாத தம்பதி - கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் இறந்த சோகம்..!

இதில் 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 14,94,409 பேர் மற்றும் 31 முதல் 45 வயது வரை அரசு பணி வேண்டி காத்திருப்பவர்கள் 17, 86, 200 பேர் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 6,872 பேர் உள்ளனர், இந்த எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகள் 1,48, 856 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
EmploymentgovernmentjobsIncreasePeopleregisteringtamil nadu
Advertisement
Next Article