Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Siddharth40 மூலம் தமிழில் அறிமுகமாகும் அம்ரித் ராம்நாத்!

01:30 PM Oct 15, 2024 IST | Web Editor
Advertisement

‘சித்தார்த் 40’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத்.

Advertisement

சமீபத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த சித்தா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து ‘இந்தியன் 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்திருந்தார். ஆனால் அந்த கதாபாத்திரம் பெருமளவு வெற்றியடையவில்லை. தொடர்ந்து ‘மிஸ் யூ’ என்ற படத்தில் சித்தார்த் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சித்தார்த்தின் 40-வது படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்குகிறார். இதில் நடிகர்கள் சரத்குமார், தேவயாணி, மீத்தா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சர் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மலையாளத்தில் வர்ஷங்களுக்கு ஷேஷம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அம்ரித், இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகனே அம்ரித் ராம்நாத் ஆவார்.

Tags :
Amrit RamnathSarathkumarSiddharthSiddharth 40
Advertisement
Next Article