Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கேரளாவில் அமீபா நுண்ணுயிர் பரவல் அதிகரிப்பு - தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கையுடன் இருக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

03:25 PM Jul 07, 2024 IST | Web Editor
Advertisement

கேரளாவில் அமீபா நுண்ணுயிர் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

கேரளாவில் கடந்த சில மாதங்களாக மூளையைத் தின்னும் அமீபா நுண்ணியிரி பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களில் குளித்த நிலையில் தலைவலி, வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்தனர். கோழிக்கோட்டைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மிருதுல், கண்ணூரை சேர்ந்த 13 வயதான தாக்‌ஷினா, லப்புரத்தைச் சேர்ந்த 5 வயதான ஃபட்வா ஆகிய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

மூளையை தின்னும் அமீபா மூளை திசுக்களை அழித்து மூளை வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த பாதிப்பு ஏற்பட்ட  100 சதவிகித நபர்களில்  97 சதவிகிதம் பேர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக  அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த அமீபா நுண்ணியிரி பரவவலை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“கேரளா மாநிலத்தில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மூவர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். கேரளாவில் இந்த நுண்ணுயிர் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இத்தகு பரவல்கள் ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்பட வேண்டும்.

அசுத்தமான நீரின் வாயிலாகவே பரவும் இந்த நுண்ணுயிர், குழந்தைகளை தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளதால், மக்களின் உயிர்களைக் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனத்தை செலுத்துமாறு திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
ADMKAmoeba VirusDMKedappadi palaniswamiKeralaMK Stalin
Advertisement
Next Article