Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமிதாப் பச்சன் குரலை #AI மூலம் பயன்படுத்தும் வேட்டையன் திரைப்படக்குழு!

09:01 PM Sep 25, 2024 IST | Web Editor
Advertisement

‘வேட்டையன்’ படத்தில் அமிதாப் பச்சினின் குரலை ஏஐ உதவியுடன், படம் வெளியாக உள்ள அனைத்து மொழிகளுக்கும் படக்குழு பயன்படுத்துகிறது.

Advertisement

ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இதில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மனசிலாயோ பாடல் தற்போதுவரை டிரெண்டிங்கில் உள்ளது. இந்த படத்தில் அமிதாப் பச்சன் சத்யதேவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னோட்ட விடியோவில் அவரது குரலுக்குப் பதிலாக பிரகாஷ் ராஜ் குரல் பயன்படுத்தப்பட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதனை கருத்திற்கொண்ட படக்குழு தற்போது ஏஐ உதவியோடு அமிதாப் பச்சனின் குரலை அனைத்து மொழிகளுக்கும் பயன்படுத்த இருக்கின்றனர்.

Tags :
aiAmitabh BachchanRajinikanthVettaiyan
Advertisement
Next Article