Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மும்பை அலிபாக்-ல் வீடு கட்ட நிலம் வாங்கிய அமிதாப் பச்சன்! எவ்வளவு தெரியுமா?

03:43 PM Apr 22, 2024 IST | Web Editor
Advertisement

மும்பையில் உள்ள அலிபாக் நகரில் வீடு கட்ட நிலத்தை ரூ.10 கோடிக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வாங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி (KALKI 2898-AD).  இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.  மேலும், இதில் அமிதாப் பச்சன்,  கமல்,  திஷா பதானி,  பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.  சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதையும் படியுங்கள் : சொமேட்டா நிறுவனத்தின் பயன்பாட்டுக் கட்டணம் திடீர் உயர்வு! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில்,  அமிதாப் பச்சனின் கேரக்டர் ரிவீலிங் வீடியோ வெளியாகியுள்ளது.  படத்தில் அமிதாப் பச்சன் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.  டி ஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காண்பித்துள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து,  பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்,  பெரும் பணக்கார மற்றும் பாலிவுட் சினிமா பிரபலங்கள் என பணக்காரர்கள் அதிகம் சொத்துக்களை வாங்கி குவிக்கும் மும்பைக்கு அருகிலுள்ள முக்கிய பகுதியான அலிபாக் நகரில் ஒரு ஆடம்பர வில்லா வீட்டை கட்டுவதற்கு நிலத்தை வாங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன் இப்பகுதியில்,  கால் ஏக்கர் நிலத்தை தி ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதா (HoABL) நிறுவனத்திடம் இருந்து ரூ. 10 கோடிக்கு வாங்கியுள்ளார்.  அமிதாப் பச்சன் குடும்பத்திற்கு மும்பையில் ஜல்சா,  பிரதீக்ஷா மற்றும் ஜனக்  ஆகிய பகுதிகளில் பங்களாக்கள் உட்பட பல சொத்துக்கள்  உள்ளன. அமிதாப் பச்சனும் அவரது மனைவியும் ஆடம்பர பங்களாவான பிரதீக்ஷாவை தங்கள் மகள் ஸ்வேதா நந்தாவுக்கு சமீபத்தில் பரிசளித்தனர்.

Tags :
actorAlibaugAmitabh Bachchanbuyshouse landLand
Advertisement
Next Article