Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தொகுதி மறுவரையறை தொடர்பான அமித்ஷாவின் உறுதியளிப்பு நம்பகத் தன்மையற்றது” - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா!

தொகுதி மறுவரையறை தொடர்பான மத்திய உள்துறை அமித்ஷாவின் பேச்சுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.
07:02 PM Feb 27, 2025 IST | Web Editor
Advertisement

தென்னிந்தியாவில் தொகுதி மறுவரையறை பெரும் விவாதத்தை எழுப்பியுள்ள நிலையில், தொகுதி மறுவரையறையில் தென் மாநிலங்கள் ஒரு தொகுதியைக் கூட இழக்காது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், “அமித்ஷாவின் பேச்சு நம்பத்தகுந்ததாக இல்லை எனவும், பாஜகவின் அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பும் தென் மாநிலங்களின் குரலை ஓடுக்கும் நோக்கில், மத்திய பாஜக அரசு இப்போது தொகுதி மறுவரையறை என்ற புதிய ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது” எனவும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில் அவர் பதிவிட்டுள்ளதாவது;

“தொகுதி மறுவரையறையின் போது தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்க பாஜக மத்திய அரசு அனுமதிக்காது என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது நம்பத்தகுந்ததல்ல. மத்திய உள்துறை அமைச்சரின் பேச்சைப் பார்க்கும்போது, ​​குழப்பமாக உள்ளது. இதில் கர்நாடகா மற்றும் தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கும், தீங்கிழைக்கும் நோக்கம் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

வரி பகிர்வு, ஜிஎஸ்டி மற்றும் இயற்கை பேரிடர் நிவாரணம், புதிய கல்விக் கொள்கை மற்றும் யுஜிசி விதிமுறைகளில் திருத்தம் உள்ளிட்ட மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் மாநிலத்தைத் தண்டிக்கும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

தேசிய அளவில் பாஜக செய்யும் அநீதிகளுக்கு எதிராக தென் மாநிலங்கள் குரல் எழுப்புவதைத் தடுக்க, நாடாளுமன்றத்தில் அவர்களின் குரலை மேலும் பலவீனப்படுத்தும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன், மத்திய பாஜக அரசு இப்போது தொகுதி மறுவரையறை என்ற புதிய ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.

தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கக்கூடாது என்ற நல்ல எண்ணம் மத்திய அரசுக்கு இருந்தால், மக்கள்தொகை விகிதத்தின் அடிப்படையில் தொகுதிகளை மறுபகிர்வு செய்ய வேண்டுமா அல்லது தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் விகிதத்தில் செய்ய வேண்டுமா? என்ற முக்கிய கேள்விக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்க வேண்டும்.

தொகுதி மறுசீரமைப்பு கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு அநீதியை ஏற்படுத்தவில்லை என்றால், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், மக்கள் தொகை அளவுகோலைக் கைவிட்டு, தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை விகிதாசார அடிப்படையில் அதிகரிக்க வேண்டும்.

கர்நாடக பாஜக தலைவர்கள் தெரு சண்டைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.  ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், அனைத்து கன்னடர்களும், சாதி, மதம், கட்சி வேறுபாடுகளை மறந்து, மத்திய அரசால் மாநிலத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.

அநீதிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்த தென் மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வரும் நாட்களில், அநீதியை எதிர்கொள்ளும் அனைத்து மாநிலங்களுடனும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தப்படும்” என பதிவிட்டுள்ளார்.

Tags :
amit shahDelimitationLok Sabha SeatsSiddaramaiah
Advertisement
Next Article