உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்ற அமெரிக்க பாடகி!
உலகின் பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் இடம்பெற்றுள்ளார்.
ஃபோர்ப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் அதிக சொத்து மதிப்பு கொண்ட கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் எல்விஎம்ஹெச்சின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் 233 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளனர்.
டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் 195 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 3வது இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 195 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருக்கிறார். இந்த நிலையில், இந்த பட்டியலில் அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் 14 வது இடத்தில் இடம்பெற்றுள்ளார். பாடல் எழுதுதல் மற்றும் இசை நிகழ்வுகள் மூலம் மட்டுமே வருவாய் ஈட்டிய முதல் நபர் இவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெய்லரின் நிகர சொத்து மதிப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர். இவரைத் தொடர்ந்து, பாடகி ரிஹானா, ஓப்ரா வின்பிரே மற்றும் ஸ்டார் வார்ஸ் இயக்குநர் ஜியார்ஜ் லுகாஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.