Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமெ. தம்பதியிடம் ரூ.65 லட்சத்தை டிக்கெட் தொகையாக பெற்ற விவகாரம் - மன்னிப்பு கேட்ட AIR நியூசிலாந்து!

12:28 PM Mar 05, 2024 IST | Web Editor
Advertisement

AIR நியூசிலாந்து நிர்வாகம் அமெரிக்காவைச் சேர்ந்த வயதான தம்பதியிடமிருந்து ரூ.65 லட்சத்தை டிக்கெட் தொகையாக பெற்றதைத் தொடர்ந்து,  அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டு பணத்தை திருப்பியளிப்பதாக கூறியுள்ளது.

Advertisement

அமெரிக்காவைச் சேர்ந்த டோட்-பாட்ரிசியா கெரெக்ஸ் என்ற வயதான தம்பதி நியூசிலாந்துக்கு விடுமுறைக்கு சென்றுள்ளனர்.  இதனிடையே அவர்கள் சென்ற 6 வாரங்களுக்குள் மனைவி பாட்ரிசியாவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் சிகிச்சைக்காக அவர்களை உடனடியாக அமெரிக்கா திரும்ப மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  இதற்காக டோட் விமான நிரிவாகதத்தை தொடர்புக் கொண்டு தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை எனவும் இதன் காரணமாக அமெரிக்கா திரும்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்காக AIR நியூசிலாந்து நிர்வாகம் அவரிடமிருந்து ரூ.65 லட்சத்தை டிக்கெட் கட்டணமாக பெற்றுள்ளது.   இது சாதாரண கட்டணத்தை விட 4 மடங்கு அதிகம் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து,  அந்நிறுவனம் அத்தம்பதியினரிடம் மன்னிப்பு கேட்டு பணத்தை திருப்பியளிப்பதாக கூறியுள்ளது.

Tags :
Air New ZealandapologizecancerFlight TicketrefundTicket Cost
Advertisement
Next Article