ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் - அதிமுகவினர் மீது வழக்கு பதிவு!
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கிற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஆனால் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை கொண்டு திமுகவினர் தொந்தரவு தருவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் இன்று திருச்சி துறையூர் சட்டமன்ற தொகுதியில் பழனிசாமி தன் பரப்புரையை தொடங்கும் நிலையில் கூட்டத்திற்குள் 108 ஆம்புலன்ஸ் வந்துள்ளது. இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனத்தை அதிமுகவினர் சோதனை செய்துள்ளனர். அதில் நோயாளி இல்லாததால் ஆத்திரம் அடைந்த அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உதவியாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டோர் மீது ஆறு பிரிவிகளில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.