நிறுவப்பட்டு 2 நாள்களில் திருடுபோன அம்பேத்கர் சிலை!
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டதில் உள்ள பாரி கிராமத்தில் கடந்த 10ம் தேதி அம்பேத்கர் சிலை ஒன்று நிறுவப்பட்டது. இந்த சிலையை நேற்று இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றனதாக கூறப்படுகிறது. சிலை மாயமானதை கிராம வாசிகள் இன்று காலை கண்டுப்பிடித்தனர். உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையும் படியுங்கள் : “எம்.எல்.ஏ-வை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குவதா?” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிலை இருந்த இடத்தில் ஆய்வு செய்தனர். கிராம வாசிகள் போலீசாரிடன் சந்தேகப் படும் நபர்களின் பெயர்களையும் கூறினர். போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேதிதா தாகர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார். வகுப்புவாதக் கலவரங்களைத் தூண்டும் நோக்கில் யாரேனும் இதனைச் செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகின்றது. நிறுவப்பட்ட 2 நாட்களில் அம்பேத்கர் சிலை மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.