Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகாராஷ்டிராவில் நிறுவப்பட்ட 2 நாளில் காணாமல் போன அம்பேத்கர் சிலை!

நிறுவப்பட்ட இரண்டு நாட்களிலேயே மத்தியப்பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
09:33 AM Mar 14, 2025 IST | Web Editor
கோப்புப் படம்
Advertisement

மத்தியப் பிரதேசத்தின் சத்தபூர் மாவட்டத்தில் உள்ள பாரி கிராமத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை (மார்.11) அன்று இந்திய அரசியலமைப்பின் தலைமைச் சிற்பி டாக்டர் அம்பேத்கரின் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அக்கிராம மக்கள் ஒன்றாக நிதி திரட்டி உத்தரப் பிரதேசத்திலிருந்து 1½ உயரமுள்ள அம்பேத்கரின் சிலையை வாங்கியுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் 18 அங்குல உயரம் கொண்ட இந்த கற்சிலை நேற்று காணாமல் போய் உள்ளது. இதனையடுத்து இதுதொடர்பாக கிராம மக்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் திருட்டு வழக்குப்பதிவு செய்த கர்ஹி - மல்ஹாரா காவல்நிலைய போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நிறுவப்பட்ட இரண்டு நாட்களிலேயே அம்பேத்கர் சிலை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Ambedkar StatuecaseMaharastramissing
Advertisement
Next Article