Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் : பிரபல அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டம்!

10:13 AM Jul 13, 2024 IST | Web Editor
Advertisement

அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் விழாவை 'தி கர்தாஷியன்ஸ்' என்னும் பிரபல தனியார் தொலைகாட்சியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கடந்த 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அஜய் தேவ்கன், ரன்பீர் கபூர், ஆலியா பட், டைகர் ஷ்ராஃப் மற்றும் வருண் தவான் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த், ராம் சரண், மகேஷ் பாபு ஆகியோரும் தங்கள் குடும்பத்தினரோடு கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி போன்ற ஜாம்பவான்கள் முதல் முன்னாள் கிரேட் கிரிஷ் ஸ்ரீகாந்த், தற்போதைய நட்சத்திரங்கள் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் வரையிலான இந்திய கிரிக்கெட் வீரர்களும் இருந்தனர்.

இதையும் படியுங்கள் : ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சன்ட் திருமணம் : ரஜினிகாந்த் முதல் ஜான்சினா வரை முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்!

அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண கொண்டாட்டங்கள் நேற்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றன. முக்கிய திருமண சடங்குகள் நேற்று (ஜூலை 12) திருமண விழாவுடன் தொடங்கியது. இந்தத் திருமண நிகழ்வுக்கு ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரையில் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் விழாவை 'தி கர்தாஷியன்ஸ்' என்னும் பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த திருமணத்தின் அனைத்து நிகழ்வுகளையும் படமாக்கி உள்ளனர்.  மேலும் இதனை ஒளிபரப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்டின் திருமண நிச்சயதார்த்தம் முதல் திருமண விழா வரை நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

Tags :
ambanianantambaniAnantRadhikaWeddingMarriageMumbairadhikamerchantReality ShowThe Kardashians
Advertisement
Next Article