Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமர்க்களம், பில்லா கெட் -அப்பில் ‘குட் பேட் அக்லி’ ஏகே!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது
07:45 PM Feb 28, 2025 IST | Web Editor
Advertisement

விடா முயற்சி படத்திற்கு பிறகு அஜித் குமார் - திரிஷா மீண்டும் இணைந்து நடித்துள்ள  திரைப்படம்  ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில்  பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மைத்திரி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

Advertisement

இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. தொடர்ந்து சமீபத்தில் திரிஷாவின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியானது. அதன்படி அவர் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில் ஆரம்பத்திலேயே  ‘ஏ.கே ஒரு ரெட் டிராகன் அவன் போட்ட ரூஸ்ஸ அவனே பிரேக் பண்ணிட்டு வந்துருக்கான்னா மூச்சுலையே முடுச்சுருவான்’ என்ற பஞ்ச்  டயலாக்குடன் அஜித் குமார் சிறையில் இருப்பது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தொடர்ந்து டீசரில், அஜித்தின் முந்தைய படங்களான அமர்க்களம், பில்லா படங்களின் தோற்றத்தில் அஜித்குமார் வருகிறார். இதனிடையே அஜித்  ‘நாம்ம எவ்ளோதான் குட்-ஆ இருந்தாலும் இந்த உலகம் நம்மளை பேட்-டாக்குது’ என்ற வசங்களை பேசிகிறார். மேலும் இதில்  கார் சேஸ் சீன், துப்பாக்கி  சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Tags :
Adhik Ravichandranajith kumargbuGood Bad UglyGood Bad Ugly TeaserTrisha
Advertisement
Next Article