Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெளியான 19 நாட்களில் ரூ.300 கோடிகளை அள்ளிய “அமரன்” திரைப்படம்?

01:58 PM Nov 19, 2024 IST | Web Editor
Advertisement

’அமரன்’ திரைப்படம் உலக அளவில் 300 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இப்படத்தில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், முகுந்த மனைவி ரெபெகாவாக சாய் பல்லவியும் நடித்திருந்தனர். அமரன் படத்தில் முகுந்த வரதராஜனின் காதல் வாழ்க்கை குறித்தும், ராணுவத்தில் அவர் சந்தித்த சவால்கள் குறித்த கதைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக ரெபேகா அமரன் படத்தில் காஷ்மீரில் முகுந்த் சண்டை போடும் போது தொலைபேசியில் என்ன ஆனதோ என துடிக்கும் காட்சி என பல்வேறு காட்சிகளில் சாய் பல்லவி தத்ரூபமாக நடிப்பை வழங்கியிருந்தார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்த ’அமரன்’ திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையன்று உலகம் முழுவதும் வெளியானது. மறைந்த முன்னாள ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட அமரன் திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

அமரன் திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாக உலக அளவில் மாபெரும் சாதனை படைத்து வருகிறது. அமரன் திரைப்படம் இந்த வருடம் வெளியான தமிழ் படங்களில் வேட்டையனை பின்னுக்கு தள்ளி வசூலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக வசூல் செய்த படமாக ’டான்’ 125 கோடி இடம்பெற்றது. இதனை அமரன் முறியடித்துள்ளது.

பிரபல சினிமா இணையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள தகவலின் படி அமரன் திரைப்படம் இந்திய அளவில் 218.6 கோடி வசூல் செய்துள்ளது. வெளிநாடுகளில் 76.75 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் அமரன் திரைப்பட வசூல் 300 கோடியை கடந்து இமாலய சாதனை படைத்துள்ளது. ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ’விக்ரம்’ திரைப்படம் வசூலை அள்ளிய நிலையில், அதற்கு பிறகு அமரன் திரைப்படம் அதிக லாபத்தை கொடுத்துள்ளது.

மேலும் ரஜினியின் ’எந்திரன்’ பட வசூல் சாதனை (216 கோடி), விஜய்யின் ’பிகில்’ (295.85), ’வாரிசு’ (297.55) ஆகிய படங்களின் வசூலை அமரன் முறியடித்துள்ளது. அமரன் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடுவதால் ஓடிடி ரிலீஸை தள்ளி வைக்க தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமரன் திரைப்படம் 350 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
AmaranBox Office CollectionSaipallavisivakarthikeyan
Advertisement
Next Article