Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விடுதலையான அல்லு அர்ஜுன்- சமந்தா ஆனந்த கண்ணீர்…!

02:02 PM Dec 15, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து விடுதலையான பின் நடிகை சமந்தா ஆறுதல் கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் பார்க்க சென்றபோது, தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ஐதராபாத் போலீசார் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று முன் தினம் [டிசம்பர் 13] அவரை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் உடனடி ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 50 ஆயிரம் பிணையுடன் அல்லு அர்ஜுனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை சிறையில் இருந்து ரிலீஸ் ஆன அல்லு அர்ஜுன் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.

அப்போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர். இதனையடுத்து நடிகர்கள் ராணா டகுபதி, நாக சைதன்யா, உபேந்திர ராவ், விஜய் தேவரகொண்டா மற்றும் புஷ்பா இயக்குநர் சுகுமார் ஆகியோர் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து பேசி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் அல்லு அர்ஜுன் வீட்டுக்கு வந்தவுடன் அவருடைய தம்பியும் நடிகருமான அல்லு சிரிஷ் அவரை நோக்கி ஓடிச் செல்வதும், அதன்பின் தன்னுடைய மகனை அல்லு அர்ஜுன் ஆராதழுவி நெகிழ்ச்சி அடைந்தது என இணையத்தில் வீடியோக்கள் உலா வருகின்றன.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை சமந்தா 'நான் ஒன்றும் அழவில்லை' என்று ஆறுதல் கூறி கண் கலங்கியுள்ளார். மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் 'இதை பார்க்க தான் காத்திருந்தேன்' என அல்லு அர்ஜுனுக்கு ஆறுதல் கூறி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Tags :
AlluArjunReleasesamanthaVigneshSivan
Advertisement
Next Article