Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி... விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு...

12:09 PM Nov 05, 2023 IST | Web Editor
Advertisement

மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக கொட்டி வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.

Advertisement

தென்காசியின் முக்கிய சுற்றுலா தலமான குற்றாலத்தில் கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களும் சீசன் ஆகும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கியதால் கடந்த ஒரு வாரமாக தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மேலும் மாலை நேரத்திற்கு பிறகு மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் கடந்த சில நாட்களாகவே இரவில் இருந்து காலை வரை குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆகையால் அதிகாலை குற்றாலத்தில் குளிக்க வரும் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

பொதுவாகவே குற்றாலத்திற்கு தென்காசி மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். ஆனால் இது போல அடிக்கடி நிகழ்வதால் பல சுற்றுலா பயணிகள் நெடுந்தொலைவில் இருந்து வந்தும் குளிக்க முடியாமல் போகிறது.

இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியும், எந்தவித அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கவும் குற்றாலத்தில் காலை வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக கொட்டி வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
Next Article