Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புதிய அமைச்சர்கள் நால்வருக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு! யார் யாருக்கு எந்தெந்த இலாகா? முழு விவரம் இதோ!

04:26 PM Sep 29, 2024 IST | Web Editor
Advertisement

புதிய அமைச்சர்கள் நால்வருக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

வி.செந்தில்பாலாஜி, கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோரை புதிதாக அமைச்சர்களாக நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு நேற்று ஒப்புதல் அளித்தார்.

அதன் அடிப்படையில் இன்று (29.9.2024) மதியம் 3.30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது பதவியேற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு உறுதிமொழியும் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி செய்துவைர்த்தார். இதன்படி முறையே ஆர்.ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, கோவி செழியன், எஸ்.எம்.நாசர் வரிசையாக அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதிதாக பதவியேற்ற 4 அமைச்சர்கள் உள்பட அனைத்து அமைச்சர்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவியின் வலப்புறம் முதலமைச்சர் முக.ஸ்டாலினும் இடப்புறம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அமர்ந்திருந்தனர்.

இதனை தொடர்ந்து, சற்று நேரத்திலேயே புதிதாக பதவியேற்ற நான்கு அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி ஆர்.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி ஏற்கனவே வகித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதோடு கூடுதலாக ஆயத்தீர்வைத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக கோவி செழியனுக்கு உயர்கல்வித்துறையும், சா.மு.நாசருக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags :
Kovi Chezhiyannasarnews7 tamilPort foliosRajendranSenthil balajiTN CabinetTN Ministers
Advertisement
Next Article