Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மருத்துவமனை கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி ஒதுக்கீடு..!

05:36 PM May 18, 2024 IST | Web Editor
Advertisement

மருத்துவமனை கடைநிலை ஊழியர்களுக்கு மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

பொதுவாக மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.  இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கும் ஷிப்ட் அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அந்த வகையில், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், காலை 6 மணி முதல் மணி 1 மணி வரை, மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என்று மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  காலை நேரங்களில் மருத்துவமனைக்கு வேரும நோயளிகளின் வருகை அதிகமாக இருப்பதால் மொத்த பணியாளர்களில் 50 சதவீத பேர் முதல் ஷிப்டில் பணியாற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து,  25 சதவீத ஊழியர்கள் 2 வது ஷிப்டிலும், 25 சதவீத ஊழியர்கள் 3 வது ஷிப்டிலும் பணியில் இருக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags :
Government Employeesgovt hospitalsHealth DepartmentShiftTN Govt
Advertisement
Next Article