Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திமுகவுடன் கூட்டணியா? - பிறந்த நாளில் கமல்ஹாசன் அளித்த பதில்!

11:25 AM Nov 07, 2023 IST | Web Editor
Advertisement

கமல்ஹாசனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுகவுடன் கூட்டணி குறித்து  நடிகர் கமல்ஹாசன் அளித்த பதில் குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள காற்றின் ஈரப்பதத்தில் இருந்து குடிநீர் தயாரிக்கும் உபகரணத்தை கமல்ஹாசன் திறந்து வைத்தார்.  இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அவர் தெரிவித்ததாவது..

"இது என் பிறந்த நாள் என்பதை விட முக்கியமான ஒரு நல்ல நாள்.  இதில் அரசியல் ஆதாயம் கடந்து மனித நேயம் சம்பந்தபட்டது.  நல்லவர்கள் சேர்ந்து நடத்தும் நல் விழா இது.  மனிதம் சார்ந்த பணிகளை முன்னெடுக்க  நான் உட்பட அமைச்சர்கள், சட்ட உறுப்பினர் ஆகியோர் வந்துள்ளனர்

இந்த வாயு ஜெல் என்ற இயந்திரம்  ராஜ் கமல் நிறுவனத்தில் 6 வருடங்களாக பயன்படுத்தி வருகிறோம்.  தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இதை பயன்படுத்தலாம்.  முன் மாதிரியாக இதை செய்வதால் இதை பார்த்து பயன்படுத்தி அனைத்து மருத்துவமனையிலும் என்னை போன்றவர்கள் அரசுக்கு கை கோர்பார்கள்.

இதனை இந்தியாவில் ஐ ஐ டி யில் வடிவமைத்துள்ளனர்.  இதை முன் மாதிரியாக அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்.  இது போன்ற பல இடங்களில் மற்றவர்களும் செய்ய வேண்டும். கட்சி சம்பந்தம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று தான் இந்த ஏற்பாடு, கமல் பண்பாட்டு மையம் சார்பில் உள்ளது.

இதுபோன்ற இயந்திரம் உள்ளது என்று அரசுக்கு பரிந்துரைக்கும் வகையில் முன் முயற்சியாக இதை தொடங்கி இருக்கிறோம்.

நாங்கள் எல்லாரும் மனிதர்கள் எங்களை மனிதம் தான் இங்கு ஒன்று சேர்த்துள்ளது எங்களுக்கு தனி கட்சி இருக்கிறது.  இதில் அரசியல் இல்லை.” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article