Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உசிலம்பட்டி அருகே குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு - பொதுமக்கள் திடீர் சாலை மறியல்!

10:05 AM Nov 07, 2023 IST | Student Reporter
Advertisement
உசிலம்பட்டி அருகே குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள் மாசடைந்த குடிநீருடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு சிவன்காளைத் தேவர்
நகரில் 200க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் உசிலம்பட்டி நகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வரும் குடிநீரில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக சாக்கடை நீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது.  இதுக் குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும்,  எந்த நடவடிக்கைகளும் எடுக்காத சூழலில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாக்கடை நீர் கலந்த குடிநீரை பாட்டிலில் எடுத்து வந்து மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Advertisement

தகவலறிந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நகர் பகுதியில் வடிகால் வசதிக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும்,  அப்பணியின் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் கலந்து வருவதாகவும்,  விரைவில் இதை சரி செய்து பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

ரா.கௌரி

Tags :
#madurai #usilampatti #sewagewater #mixedwithdrinkingwater #peoplesroadblockade
Advertisement
Next Article