Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"வெளிநாடு வாழ் இந்தியர்கள் - இந்தியக் குடிமக்கள் இடையேயான திருமணங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்" - சட்ட ஆணையம் பரிந்துரை

09:17 PM Feb 16, 2024 IST | Web Editor
Advertisement

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், இந்தியக் குடிமக்களுக்கும் இடையேயான அனைத்து திருமணங்களும் இந்தியாவில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்திடம், நீதிபதி ரித்து ராஜ் தலைமையிலான சட்ட ஆணையம் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"இந்திய குடிமக்களை வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணம் செய்து மோசடி நடக்கும் நிகழ்வுகள் அதிகரிப்பது கவலையளிக்கிறது.  இந்த திருமணங்கள் ஏமாற்றும் வகையில் மாறி, குறிப்பாக பெண்களை ஆபத்தான சூழ்நிலையில் தள்ளும் முறை அதிகரித்து வருவதை பல அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.  இதனால், இந்திய குடிமக்கள்- வெளிநாடு வாழ் இந்தியர்கள் இடையிலான திருமணத்தை இந்தியாவில் பதிவு செய்வதை கட்டாயம் ஆக்க வேண்டும்.

 

விவாகரத்து, துணையை பராமரிப்பது, குழந்தைகளை பராமரிப்பது, நிர்வகிப்பது, சம்மன், வாரண்ட், நீதித்துறை ஆவணங்கள் அனுப்புவது தொடர்பாக புதிய சட்டத்தில் விதிமுறைகளை வகுக்க வேண்டும்.  இது போன்ற திருமணங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண உள்ளூர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
IndiaLaw CommissionNRINRI MarriagesRegistration
Advertisement
Next Article