Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தலைவர்களுக்கு எல்லாம் தலைவர் பெரியார்" - முதலமைச்சர் #MKStalin பேச்சு

எங்கள் தலைவர்களுக்கெல்லாம் தலைவர் பெரியார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12:53 PM Jan 31, 2025 IST | Web Editor
Advertisement

கொளத்தூர் பகுதியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் மு..ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர்திரு.வி.க. நகர் கன்னிகாபுரம் விளையாட்டு மைதான பணிகளை நேரில் பார்வையிட்டார்.கன்னிகாபுரம் பகுதியில் தன்னை வரவேற்பதற்காக காத்திருந்த மாணவர்களுக்கு பாக்ஸிங் கிளவுஸில் ஆட்டோகிராப் போட்டும், செல்பிக்கு போஸ் கொடுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ந்தார்.

Advertisement

அதனுடன், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கன்னிகாபுரம் பகுதியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ரூ.44.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் மற்றும் TNUHDB குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது அவருடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

"திமுக ஆட்சிக்கு பின், வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்காக சட்டப்பேரவையில் ரூ.1,000 கோடி முதலில் ஒதுக்கி அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன், தற்போது ரூ.6,350 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு ஆண்டுக்குள் அனைத்து பணிகளும் முடிவடையும். வட சென்னையை வளர்ந்த சென்னையாக மாற்றுவோம்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது, அதனால்தான் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தொழிற்சாலைகள் இங்கு தொடர்ந்து வருகின்றன. ஆளுநர் எல்லா பிரச்னைகளிலும் அரசுக்கு எதிராகதான் செயல்படுகிறார். அது எங்களுக்கு நல்லதாகவே உள்ளது. அவர் இதை தொடர்ந்து செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

அவரின் இப்போக்கு ஆட்சிக்கு சிறப்பைதான் சேர்க்கிறது. பெரியாரை மரியாதை குறைவாக பேசக்கூடியவர்களுக்கு, நான் மரியாதை கொடுக்க விரும்பவில்லை. பெரியார்தான் எங்களுக்குத் தலைவர். எங்கள் தலைவர்களுக்கெல்லாம் தலைவர் பெரியார். எனவே, அவதூறுகளை பெரிதுபடுத்தவும், பொருட்படுத்தவும் விரும்பவில்லை"

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags :
cm stalinCMO TamilNadukolathurMK Stalinnews7 tamilNews7 Tamil UpdatesVada Chennai
Advertisement
Next Article