வாணியம்பாடியில் கபடி போட்டி: 44 அணிகள் பங்கேற்பு!
09:40 AM Mar 04, 2024 IST
|
Web Editor
இதனைத் தொடர்ந்து பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூ.1 லட்சம் முதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
Advertisement
வாணியம்பாடியில் ஆடவர், மகளிர் என இருபாலருக்கும் நடைபெற்ற கபடி போட்டியில் 44 அணிகள் பங்கேற்றன.
Advertisement
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் ஆடவர், மகளிர் என இருபாலருக்குமான ஆல் இந்தியா A-கிரேட் கபடி போட்டி நடைபெற்றது. 3 நாட்கள் இரவு பகலாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அளவில் சர்வதேச தரம் வாய்ந்த 44 அணிகள் பங்கேற்றன. இந்த கபடி போட்டியில் முதல் பரிசு பெற்ற ஆண்கள் அணிக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரிய குமார் உட்பட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளை காண ரசிகர்கள் பலர் கலந்து கொண்டு, வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
Next Article