Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அகில இந்திய ஹாக்கி போட்டியின் 5ம் நாள்! - மும்பை, போபால் அணிகள் வெற்றி!

07:38 AM May 29, 2024 IST | Web Editor
Advertisement

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியின் 5வது நாள்
போட்டியில் மும்பை, போபால் அணிகள் வெற்றி பெற்றது.

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி
ஹாக்கி மைதானத்தில் அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் மே 24ம் தேதி முதல்
நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது. ஐந்தாம் நாளான நேற்று(மே-28ம் தேதி) நான்கு போட்டிகள் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணியும் ஒடிசா, டாடா நாவல் ஹாக்கி அகாடமி அணியும் மோதின. இதில் 4:3 என்ற கோல் கணக்கில் போபால், நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி வெற்றிப் பெற்றது.

இதையும் படியுங்கள் : கல்கி படத்தில் நடிகர் பிரபாஸ் பயன்படுத்திய புஜ்ஜி எனும் நவீன கார் – சென்னையில் ஆச்சர்யத்தோடு பார்வையிட்ட பொதுமக்கள்!

இதையடுத்து, 2வது போட்டியில் சென்னை, இன்கம் டேக்ஸ் அணியும் மும்பை, யூனியன் பேங்க் அணியும் மோதின. இதில் 1:0 என்ற கோல் கணக்கில் மும்பை, யூனியன் பேங்க் அணி வெற்றிப் பெற்றது. 3லது போட்டியில் ஹைதராபாத், ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா அணியும் சென்னை, தமிழ்நாடு லெவன் அணியும் மோதின. இந்த போட்டி 1:1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. 4வது போட்டியில் சென்னை, இந்தியன் பேங்க் அணியும் புபனேஸ்வர், நிஸ்வாஸ் அணியும் மோதின. இந்த போட்டி 2:2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

Tags :
BhopalhockeyIndia Hockey TournamentkovilpattimatchMumbaiwon
Advertisement
Next Article